Sunday, 30 June 2013

பிந்து மாதவி ஏக்கம் என்ன?


hot bindhu madhavi



தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக களமிறங்கி கதாநாயகி அந்தஸ்தை பிடித்தவர் சில்க்ஸ்மிதா. ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தவர். இதில் கமலுடன் நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா என்ற பாடல் சில்க்கை பெரிய இடத்துக்கு கொண்டு சென்றது. அதன்பிறகுதான் அவரது மார்க்கெட் தாறுமாறாக எகிறியது.



ஆனால், மார்க்கெட் பீக்கில் இருந்த நேரத்தில் திடீரென ஒருநாள் சில்க் இறந்து விட்டார். அவரது இறப்பு கொலையா? தற்கொலையா? என்ற சர்ச்சைகள் அப்போது எழுந்தது. ஆனால், தற்கொலையாகவே முடிக்கப்பட்டது. இந்த நிலையில், சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி இந்தி, தமிழ், மலையாளத்தில் படங்கள் வெளியாகின, அந்த படங்களில் வித்யாபாலன், சனாகான் ஆகியோர் நடித்திருந்தனர்.



ஆனால், சில்க்ஸ்மிதாவின் ஜெராக்ஸ் போன்று இருக்கும் ஜூனியர் பிந்துமாதவியை மறந்தே விட்டார்கள். அதுதான் பிந்துமாதவிக்கு பெரிய வருத்தமாக உள்ளதாம். மேலும், அடுத்து சில்க் பாணியில் யாராவது படம் பண்ணினால் அவர்களை சந்தித்து சான்ஸ் கேட்பேன் என்று கூறிவரும் பிந்துமாதவி, இனிமேல் குடும்ப நடிகை என்கிற முத்திரையை கழட்டி எறிந்து விட்டு, சில்க்ஸ்மிதா போன்று கிளாமர் நாயகியாகவும் அவதரிக்கப்போகிறாராம்.



பிந்து மாதவி ஏக்கம் என்ன?

Saturday, 29 June 2013

யார் விஜய் சேதுபதியின் மாற்றம் காரணம்?


 



Soodhu-Kavvum



 



‘ஹாட்ரிக் ஹிட் ஹீரோ’ விஜய் சேதுபதியின் போக்கில் எக்கச்சக்க மாற்றம்… விஜய் சேதுபதி முன்புபோல் யாரிடமும் சகஜமாக பேசுவதில்லை.. அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றிவிடுகிறார்… ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்கு கையடக்க காலண்டர் அடித்துக்கொண்டு கோலிவுட் வீதிகளில் அகப்படுபவர்களிடமெல்லாம் அன்பொழுக பேசி அந்த காலண்டரை கையில் திணித்து இந்த வருஷம் நம்ம வருஷமாக வாழ்த்துங்கள்… என ஆசி பெற்ற விஜய் சேதுபதியயா இது? என அவரது மாற்றம் கண்டு மூக்கின்மேல் விரல் வைப்பவர்களின் கனிவான கவனத்திற்கு…



‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை தொடர்ந்து அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தக்காணோம், ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’ உள்‌ளிட்ட படங்களின் ஹாட்ரிக் வெற்றி அல்லவாம்… அப்புறம் பின்னே…?! சில வருடங்களுக்கு முன் காலம் தவறிய விஜய் சேதுபதியின் அப்பாவும் அவர் வாங்கிய கடன்களும்தான் காரணமாம்! ஆமாம் பின்னே..?! விஜய் ‌சேதுபதி ஆரம்பித்ததும் ‘‘அப்பா கொஞ்சம் பணம் தரனணும் தம்பி’ என கையில் அத்தாட்சியுடனும், அத்தாட்சி, தகுந்த சாட்சி எதுவும் இல்லாமலும்‌ நிறையபேர் விஜய் சேதுபதி வீட்டு வாசலில் கியூ கட்டி நிற்காத குறையாக வந்துபோக ஆரம்பித்துவிட்டனராம். சென்னை வடபழநி பகுதியில் கன்ஸ்ட்ரக்ஷன் பிசினசில் சில பல லட்சங்கள் நஷ்டப்பட்டு போன விஜய் சேதுபதியின் அப்பா சிலரிடம் கடன்பட்டிருந்தது உண்மைதான் என்றாலும் ஆளாளுக்கு என்று… வந்து நின்றதில் மனிதர் விக்கித்துப் போய்விட்டாராம்! அதன் விளைவுதான், விஜய் சேதுபதியின் போக்கில் இப்படி நிறைய மாற்றங்கள் என்கிறது விவரமறிந்த வட்டாரம்! நெசந்தானா விஜய் சேதுபதி?!



 


யார் விஜய் சேதுபதியின் மாற்றம் காரணம்?

Thursday, 27 June 2013

சினிமாவுக்கு வருவதற்கு முன்னாள் கம்பி கட்டும் வேலை செய்த காமெடி நடிகர்


சென்னை: இன்றைய தேதியில் அனைத்து படங்களிலும் காமெடி பண்ணும் நடிகர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு கம்பி கட்டும் வேலை செய்தாராம். கோலிவுட்டின் பிசியான காமெடி நடிகர் என்றால் அனைவரும் சொல்வது அந்த சந்தன நடிகரின் பெயரைத் தான்.



 



காமெடியில் புகுந்து விளையாடும் அவர் நடிக்க வரும் முன்பு கம்பி கட்டும் வேலை செய்தாராம். அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து தற்போது கை நிறைய சம்பாதிக்கிறார். எந்த பகுதியில் கம்பி கட்டும் வேலை செய்தாரோ தற்போது அதே பகுதியில் பெரிய பங்களா வாங்கிப் போட்டிருக்கிறாராம். இது தவிர நகரின் மைய பகுதியிலும் ஒரு பங்களா வாங்கியுள்ளாராம்.



காமெடியில் சம்பாதிக்கும் பணத்தை அசையா சொத்துக்களில் முதலீடு செய்து வருகிறாராம். ரியல் எஸ்டேட் விலை தான் நாளுக்கு நாளுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறதால் அதில் முதலீடு செய்கிறாரோ. பிழைக்கத் தெரிந்த மனிதர் தான்.



 


சினிமாவுக்கு வருவதற்கு முன்னாள் கம்பி கட்டும் வேலை செய்த காமெடி நடிகர்

Monday, 24 June 2013

ஜொலிக்குமா சூர்யாவின் 'துருவ நட்சத்திரம்'?


 



dhruva natchathiram



 



 



கவுதம் மேனன் இயக்கம், தமிழ் சினிமாவில் இன்றைக்கு அனைவருக்கும் பிடித்தமான ஹீரோவாகத் திகழும் சூர்யா நடிப்பு, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இயக்கம்… என பெரிய எதிர்ப்பார்ப்புடன் அறிவிக்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம், இன்னும் அறிவிப்போடே நிற்கிறது.



 



கடந்த ஜூன் 17-ம் தேதியே படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கவுதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் தயாராக நிற்கிறார்கள். ஆனால் சூர்யாதான் இன்னும் தயாராக இல்லை. பொதுவாக ஒரு படத்துக்கு கமிட் ஆன பின், இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளமாட்டார் சூர்யா. ஆனால் முதல் முறையாக அவர் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடியாத அளவு தயக்கம் காட்டி வருகிறார்.



 



இந்தப் படத்தை கவுதம் மேனனே தன் போட்டான் கதாஸ் மூலம் தயாரிக்கிறார். சூர்யாவுடன், சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆனால் சூர்யாவின் ஜோடி யார் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படத்துக்காக முதலில் த்ரிஷாவை அணுகினாராம் இயக்குநர். அவரும் ஒப்புக் கொண் நிலையில், படப்பிடிப்பு தாமதமானதால் த்ரிஷா விலகிக் கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் த்ரிஷா வேண்டவே வேண்டாம் என சூர்யா கண்டிப்புடன் கூறியதால்தான் த்ரிஷா நடிக்கவில்லை என்று ஒரு பேச்சு நிலவுகிறது.



 



மேலும் சூர்யாதான் அமலா பாலை ஒப்பந்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனால் இப்போது அமலாவும் இந்தப் படத்தில் இல்லை என்கிறார்கள். படம் எப்போது தொடங்கும் என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை. இதனால் துருவ நட்சத்திரம் தொடங்குமா, அல்லது யோஹன் மாதிரி ஆகிவிடுமா என கவலையோடு கைபிசைகிறது கவுதம் யூனிட்!



 


ஜொலிக்குமா சூர்யாவின் 'துருவ நட்சத்திரம்'?

Saturday, 22 June 2013

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி விருந்தளித்து 39 பிறந்த நாள் கொண்டாடிய விஜய்!


vijay-birthday39



சென்னை: குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம், ஏழைகளுக்கு ஏகப்பட்ட இலவசப் பொருள்கள், அன்னதானம் என வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடி வந்த விஜய், இந்த முறை அமைதியாக ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி விருந்து அளித்து பிறந்த நாளை 'அடக்கமாகக்' கொண்டாடினார். 





இன்று விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அரசியல் நெருக்கடிகள் காரணமாக அவர் இந்த முறை விமரிசையாக பிறந்த நாள் கொண்டாடவில்லை என்று கூறப்படுகிறது. 





இன்று காலையிலேயே தன் பெற்றோரைச் சந்தித்து ஆசி பெற்ற விஜய், பின்னர் ஜில்லா படப்பிடிப்புக்குக் கிளம்பிப் போய்விட்ட விஜய், அங்கு படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்காக படக்குழுவினர் கேக் வரவழைத்திருந்தனர். 





கேக் வெட்டிய பிறகு, அனைவருக்கும் தன் கையாலேயே பிரியாணி பரிமாறினார் விஜய்.



ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி விருந்தளித்து 39 பிறந்த நாள் கொண்டாடிய விஜய்!

Wednesday, 19 June 2013

சித்தார்த்தின் பெற்றோரை சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கிய சமந்தா!


samantha



நடிகர் சித்தார்த்தின் பெற்றோரை நேரில் சந்தித்து தங்கள் திருமணத்துக்கு சம்மதம் பெற்றார் சமந்தா என செய்திகள் பரபரக்க ஆரம்பித்துள்ளன.



இதன் மூலம் சித்தார்த்-சமந்தா திருமணம் நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது. சிந்துபாதின் கதையைப்போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது சித்தார்த்தின் காதல் விவகாரம். ஏற்கெனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்த சித்தார்த், அதன் பிறகு நான்கு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஸ்ருதியுடன் ஒன்றாக குடும்பம் நடத்தியதாகக் கூட பேசப்பட்டது.



இந்த நிலையில் புதிதாக சமந்தாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் சமந்தாவின் பெற்றோர் இந்தக் காதலை ஏற்கவில்லை. சித்தார்த்தின் பெற்றோருக்கும் இதில் சம்மதமில்லையாம். இதையடுத்து பெற்றோரை சமரசபடுத்தி சம்மதம் வாங்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டனர்.



சமந்தா நேரடியாக சித்தார்த் வீட்டுக்கு சென்று, அவரது பெற்றோரை சந்தித்தார். நீண்ட நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.



சித்தார்த் உறவினர்களையும் சந்தித்து விட்டு திரும்பினார். நீண்ட யோசனைக்கு பிறகு சித்தார்த் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர். கைவசம் உள்ள படங்கள் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தில் உள்ளாராம் சமந்தா



சித்தார்த்தின் பெற்றோரை சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கிய சமந்தா!

Tuesday, 18 June 2013

டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க: நயன்தாராவுக்கு உதயநிதி உத்தரவு


idhu kadhirvelanin kadhali



இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பில் பாடல் ஒன்றுக்கு படுகவரச்சியாக உடை அணிந்து வந்த நயன்தாராவிடம் டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க என்று நாயகன் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டாராம். நயன்தாரா படிப்பிடிப்புகளுக்கு போர்த்திக் கொண்டு வந்ததுடன் படங்களிலும் கவர்ச்சிக்கு தடா போட்டார்.



இதையடுத்து அவர் நடிக்கும் படங்களில் இளம் நாயகி ஒருவரை நடிக்க வைத்து அவருக்கு முக்கியத்துவமும், கவர்ச்சியும் உள்ள கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி நம்மை வயதானவர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டார்களே என்று நயன்தாரா வருத்தப்பட்டுள்ளார். இதையடுத்து நயன்தாராவின் உடையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.



பாடலில் படுகவர்ச்சி இது கதிர்வேலன் காதல் படத்தில் கவர்ச்சிக்கு வேலை இல்லை என்றாலும் நயனின் விருப்பத்திற்காக இயக்குனர் அவரை பாடல் காட்சிகளில் படுகவர்ச்சியாக ஆட வைத்தாராம்.



அதைப் பார்த்த நாயகன் உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். என் படத்தில் கதைக்கு தானே தவிர கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இல்லை என்று கறாராக சொல்லிவிட்டாராம்.



படுகவர்ச்சியான உடையணிந்து வந்த நயனிடம் கொஞ்சம் டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க என்று உதயநிதி உத்தரவிட்டாராம். இதையடுத்து நயன் பழையபடி போர்த்திக் கொண்டு வந்து உதயநிதியுடன் டான்ஸ் ஆடினாராம்.



 



 



டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க: நயன்தாராவுக்கு உதயநிதி உத்தரவு

Monday, 17 June 2013

அஜீத்தின் மாறுபட்ட கெட்-அப்


ajith in new avatar



விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், அஜீத் – ’சிறுத்தை’ சிவா இணையும் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் முழுக்க முழுக்க தாடி, வெள்ளை வேஷ்டி சட்டையுடன் மாறுபட்ட கெட்-அப்பில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் தமன்னா, விதார்த், மஹத் மற்றும் பலர் நடித்து வர, படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.



இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வர, இந்த படப்பிடிப்பு முடிந்ததும் அஜித், தமன்னா இருவரும் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பிற்காக ஐரோப்பா நாடு செல்ல இருக்கிறார்கள். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். அஜீத் நடிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ள படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காத நிலையில் இப்படத்தின் தலைப்பை வெளியிட வேண்டாம் என்று கூறி இருக்கிறாராம் அஜீத். ஆனால் படத்திற்கு ‘விநாயகம் பிரதர்ஸ்’ என்ற பெயரை ஓகே செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.



அஜீத்தின் மாறுபட்ட கெட்-அப்

Sunday, 16 June 2013

என்னாது, ஷாருக்கான் 3வது முறையாக அப்பாவாகப் போகிறாரா?


sharukh khan



மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கௌரிக்கு மூன்றாவது குழந்தை பிறக்கப் போகிறது என்று பேச்சாக கிடக்கிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கௌரிக்கு ஆர்யன்(15) என்ற மகனும், சுஹானா(13) என்ற மகளும் உள்ளனர்.



இந்நிலையில் அவர்கள் வாடகை தாய் மூலம் மூன்றாம் குழந்தையை வரவேற்கத் தயாராக உள்ளதாக பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் ஐடியாவைக் கொடுத்தது கௌரி தானாம்.



மூன்றாவது குழந்தை ஆண் என்று கூறப்படுகிறது. நடிகர் ஆமீர் கானும், அவரது மனைவி கிரண் ராவும் வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொண்ட ஆண் குழந்தை தான் ஆசாத். அவர்கள் பார்த்த மருத்துவர் மூலம் தான் ஷாருக்கும் வாடகை தாயை அணுகியுள்ளார் என்று கூறப்படுகிறது. மூன்றாவது குழந்தையை வரவேற்க கௌரி தயாராகிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஷாருக் காத்த ரகசியம் கசிந்துவிட்டதா அல்லது வதந்தியா என்று தான் தெரியவில்லை.



என்னாது, ஷாருக்கான் 3வது முறையாக அப்பாவாகப் போகிறாரா?

Manivanan Passed away stills









Saturday, 1 June 2013

Vijay joins 'Jilla' team today


jilla movie



Ilayathalapathy Vijay has joined Jilla team today on June 1. Director Nesan has completed canning the first schedule without Vijay and he will shoot few important scenes between Vijay and Mohan Lal in this schedule. Vijay will be shooting for the film for the next few weeks, in and around the Chennai city.



Mahat today tweeted in the morning "Have been WAITING for this day! Our one n only Ilayathalapathy Vijay has joined d sets of JILLA! Gonna start shooting with him!" Jilla is being helmed by Nesan and Imman will be credited for the music. Kajal Aggarwal pairs up with Vijay again after Thuppakki for this film and Poornima Bhagyaraj, Niveda Thomas, Soori, Thambi Ramaiah and Prakash Raja play important roles.



 



R B Chowdary is producing Jilla under Super Good Films with R Ganesh handling the cinematography and editing by Praveen, Srikanth.



 



Vijay joins 'Jilla' team today

Kutti Puli – Fans Review


kutti pulli movie review



M Sasikumar is coming back after the success of Sundarpandian and Poraali and the expectations are obviously high from his next film Kutti Puli. The film has been released in 320 screens in Tamil Nadu and it is distributed by leading distribution company Red Giant Movies. AGS is releasing in 90 screens in NSC area.



Debutante Muthaiah, a former associate of Boopathi Pandian, is the director of Kutti Puli and it is produced by Muruganantham of Vaagai Sooda Vaa fame. Laksmi Menon has paired up with Sasikumar in the film. While Mahesh Muthuswamy has handled the camera, M Ghibran has composed the music. The film has five songs and 'Aruvaakaaran…' and 'Kaathu kaathu…' songs have already won the hearts of the audience. This factor has added hype around the film. Well, is that enough for a movie to work? No isn't? But it will certainly help the film to get good opening and the early reports indicate the same. The film has got good opening but negative reviews are doing rounds on social networking site.


Latest tweets about ##KuttiPulli







Kutti Puli – Fans Review