மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கௌரிக்கு மூன்றாவது குழந்தை பிறக்கப் போகிறது என்று பேச்சாக கிடக்கிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கௌரிக்கு ஆர்யன்(15) என்ற மகனும், சுஹானா(13) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் வாடகை தாய் மூலம் மூன்றாம் குழந்தையை வரவேற்கத் தயாராக உள்ளதாக பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் ஐடியாவைக் கொடுத்தது கௌரி தானாம்.
மூன்றாவது குழந்தை ஆண் என்று கூறப்படுகிறது. நடிகர் ஆமீர் கானும், அவரது மனைவி கிரண் ராவும் வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொண்ட ஆண் குழந்தை தான் ஆசாத். அவர்கள் பார்த்த மருத்துவர் மூலம் தான் ஷாருக்கும் வாடகை தாயை அணுகியுள்ளார் என்று கூறப்படுகிறது. மூன்றாவது குழந்தையை வரவேற்க கௌரி தயாராகிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஷாருக் காத்த ரகசியம் கசிந்துவிட்டதா அல்லது வதந்தியா என்று தான் தெரியவில்லை.
என்னாது, ஷாருக்கான் 3வது முறையாக அப்பாவாகப் போகிறாரா?
No comments:
Post a Comment