கவுதம் மேனன் இயக்கம், தமிழ் சினிமாவில் இன்றைக்கு அனைவருக்கும் பிடித்தமான ஹீரோவாகத் திகழும் சூர்யா நடிப்பு, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இயக்கம்… என பெரிய எதிர்ப்பார்ப்புடன் அறிவிக்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம், இன்னும் அறிவிப்போடே நிற்கிறது.
கடந்த ஜூன் 17-ம் தேதியே படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கவுதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் தயாராக நிற்கிறார்கள். ஆனால் சூர்யாதான் இன்னும் தயாராக இல்லை. பொதுவாக ஒரு படத்துக்கு கமிட் ஆன பின், இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளமாட்டார் சூர்யா. ஆனால் முதல் முறையாக அவர் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடியாத அளவு தயக்கம் காட்டி வருகிறார்.
இந்தப் படத்தை கவுதம் மேனனே தன் போட்டான் கதாஸ் மூலம் தயாரிக்கிறார். சூர்யாவுடன், சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆனால் சூர்யாவின் ஜோடி யார் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படத்துக்காக முதலில் த்ரிஷாவை அணுகினாராம் இயக்குநர். அவரும் ஒப்புக் கொண் நிலையில், படப்பிடிப்பு தாமதமானதால் த்ரிஷா விலகிக் கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் த்ரிஷா வேண்டவே வேண்டாம் என சூர்யா கண்டிப்புடன் கூறியதால்தான் த்ரிஷா நடிக்கவில்லை என்று ஒரு பேச்சு நிலவுகிறது.
மேலும் சூர்யாதான் அமலா பாலை ஒப்பந்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனால் இப்போது அமலாவும் இந்தப் படத்தில் இல்லை என்கிறார்கள். படம் எப்போது தொடங்கும் என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை. இதனால் துருவ நட்சத்திரம் தொடங்குமா, அல்லது யோஹன் மாதிரி ஆகிவிடுமா என கவலையோடு கைபிசைகிறது கவுதம் யூனிட்!
ஜொலிக்குமா சூர்யாவின் 'துருவ நட்சத்திரம்'?
No comments:
Post a Comment