விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், அஜீத் – ’சிறுத்தை’ சிவா இணையும் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் முழுக்க முழுக்க தாடி, வெள்ளை வேஷ்டி சட்டையுடன் மாறுபட்ட கெட்-அப்பில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் தமன்னா, விதார்த், மஹத் மற்றும் பலர் நடித்து வர, படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வர, இந்த படப்பிடிப்பு முடிந்ததும் அஜித், தமன்னா இருவரும் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பிற்காக ஐரோப்பா நாடு செல்ல இருக்கிறார்கள். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். அஜீத் நடிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ள படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காத நிலையில் இப்படத்தின் தலைப்பை வெளியிட வேண்டாம் என்று கூறி இருக்கிறாராம் அஜீத். ஆனால் படத்திற்கு ‘விநாயகம் பிரதர்ஸ்’ என்ற பெயரை ஓகே செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அஜீத்தின் மாறுபட்ட கெட்-அப்
No comments:
Post a Comment