Sunday, 30 June 2013

பிந்து மாதவி ஏக்கம் என்ன?


hot bindhu madhavi



தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக களமிறங்கி கதாநாயகி அந்தஸ்தை பிடித்தவர் சில்க்ஸ்மிதா. ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தவர். இதில் கமலுடன் நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா என்ற பாடல் சில்க்கை பெரிய இடத்துக்கு கொண்டு சென்றது. அதன்பிறகுதான் அவரது மார்க்கெட் தாறுமாறாக எகிறியது.



ஆனால், மார்க்கெட் பீக்கில் இருந்த நேரத்தில் திடீரென ஒருநாள் சில்க் இறந்து விட்டார். அவரது இறப்பு கொலையா? தற்கொலையா? என்ற சர்ச்சைகள் அப்போது எழுந்தது. ஆனால், தற்கொலையாகவே முடிக்கப்பட்டது. இந்த நிலையில், சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி இந்தி, தமிழ், மலையாளத்தில் படங்கள் வெளியாகின, அந்த படங்களில் வித்யாபாலன், சனாகான் ஆகியோர் நடித்திருந்தனர்.



ஆனால், சில்க்ஸ்மிதாவின் ஜெராக்ஸ் போன்று இருக்கும் ஜூனியர் பிந்துமாதவியை மறந்தே விட்டார்கள். அதுதான் பிந்துமாதவிக்கு பெரிய வருத்தமாக உள்ளதாம். மேலும், அடுத்து சில்க் பாணியில் யாராவது படம் பண்ணினால் அவர்களை சந்தித்து சான்ஸ் கேட்பேன் என்று கூறிவரும் பிந்துமாதவி, இனிமேல் குடும்ப நடிகை என்கிற முத்திரையை கழட்டி எறிந்து விட்டு, சில்க்ஸ்மிதா போன்று கிளாமர் நாயகியாகவும் அவதரிக்கப்போகிறாராம்.



பிந்து மாதவி ஏக்கம் என்ன?

No comments:

Post a Comment