Wednesday, 3 July 2013

வாடகைத் தாய் மூலம் ஷாரூக்கானுக்கு ஆண்குழந்தை - உறுதி செய்தார் கவுரி கான்


 



shah-rukh-khan-gauri-khan



 



 



மும்பை: ஷாரூக்கானுக்கு வாடகைத் தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அந்தக் குழந்தை நலமுடன் தங்களிடம் இருப்பதாகவும் கவுரி கான் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலமாக பரபரப்பை ஏற்படுத்திய ஷாருக்கானின் வாடகைத்தாய் குழந்தை பற்றிய முழு தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 27ஆம் தேதி, அந்தேரியில் உள்ள மஸ்ரானி பெண்கள் மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்றின் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பம் மும்பை மாநகராட்சி கழகத்திற்கு வந்துள்ளது. அதில் பெற்றோர்களின் பெயராக ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரிகானின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.



 



குழந்தை 34 வாரங்களில் பிறந்ததாகவும், 1.5 கிலோ எடையுடன் இருந்ததாகவும் மாநகராட்சிக் கழகத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் பாம்னே தெரிவித்துள்ளார். அந்தக் குழந்தை மஸ்ரானி மருத்துவமனையில் இருந்து ஜூஹுவில் உள்ள நானாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. வாடகைத் தாய் நமிதா சிப்பர் தற்போது அந்தக் குழந்தை ஷாருக்கான் தம்பதியரிடம் சேர்க்கப்பட்டு, அவர்களது இல்லத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் வாடகைத் தாய் குறித்த விபரமும் வெளியாகியுள்ளது. அவர் பெயர் நமிதா சிப்பர்.



ஷாருக்கான் மனைவியின் நெருங்கிய உறவினர் இவர். குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு அவர் லண்டனுக்குச் சென்றுவிட்டதாக ஷாருக்கானின் நண்பர்கள் கூறுகின்றனர். ஜூன் மாத இறுதியில் குழந்தைப் பிறப்பு பற்றிய அறிக்கை கிடைத்ததாக மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் மனிஷா மைஸ்கர் தெரிவித்துள்ளார். அப்போது குழந்தையின் பாலினம் குறித்து கருவிலேயே சோதனை செய்து தெரிந்துகொண்டதாக பரபரப்பான செய்தி வெளியானதால், இந்த அறிக்கையை உடனடியாகத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியதாக அவர்கள் தெரிவித்தனர். வாடகைத் தாய்களை அனுமதிக்கும் இந்திய சட்டவிதிமுறைகள், குழந்தையின் பாலினத்தைக் கருவிலேயே பரிசோதித்துத் தெரிந்து கொள்வதை அனுமதிப்பதில்லை.



 



இந்நிலையில் தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை நடிகர் ஷாருக்கான் மறுத்துள்ளார். விரைவில் இந்தக் குழந்தை குறித்து செய்தியாளர்களிடம் அவர் அறிவிப்பு வெளியிடப் போகிறாராம். ஷாரூக்கானுக்கு ஏற்கேனவே 15 வயதில் ஆர்யன் என்ற மகனும், 13 வயதில் சுஹானா என்ற மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.



 


வாடகைத் தாய் மூலம் ஷாரூக்கானுக்கு ஆண்குழந்தை - உறுதி செய்தார் கவுரி கான்

No comments:

Post a Comment