தமிழில் பெரிதாக படவாய்ப்புகள் இல்லாததால் சென்னைக்கே வருவதில்லை நடிகை அஞ்சலி.
இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தன்னுடைய கங்கா மற்றும் முனி பார்ட்-3 படத்தில் அஞ்சலியை நடிக்க வைப்பதற்கு முடிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இதில் கதாநாயகியாக டாப்ஸி நடிக்கின்றார். கூடவே கோவை சரளா, மனோபாலா, மயில்சாமி, சாம்ஸ் ஆகிய பலரும் இருக்கிறார்கள்.
இப்படத்தின் இரண்டாவது பகுதியில் அஞ்சலி இடம் பெறும் காட்சிகள் வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.
படத்தில் அஞ்சலியின் திடீர் வருகையால் தனக்கான படக்காட்சிகளில் மாற்றம் ஏற்பட்டு விடுமோ என்ற கவலையில் உள்ளாராம் டாப்ஸி.
தமிழ்ப்படத்தில் அஞ்சலி மீண்டும் கங்கா படத்தின் மூலம் கலக்க வருகிறார்.
அஞ்சலி வரவால் ஆடிப்போன டாப்ஸி
No comments:
Post a Comment