கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங், தனது காதலனை மணக்கப் போவதாக பகிரங்கமாக கூறியுள்ளார்.
சமீபத்தில் சிம்புவை காதலிப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஹன்சிகா மோத்வானி.
அவரைத் தொடர் ந்து தற்போது விசாகா சிங், தன்னுடைய காதலனை பற்றி வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
இவர் தற்போது வாலிப ராஜா என்ற படத்தில் நடிப்பதுடன், இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
தனது காதல் குறித்து விசாகா கூறுகையில், மிகவும் ஆழமாக காதலித்துக் கொண்டிருக்கும் நான் என் காதலையும், காதலனையும் மறுக்க மாட்டேன்.
குழந்தை பருவத்திலிருந்தே நாங்கள் காதலித்து வருகிறோம். அவர் யார் என்பது தற்போது ரகசியமாகவே இருக்கட்டும்.
மிகவும் கனிவான அவரை காதலனாக அடைந்தது எனது அதிர்ஷ்டம். 3 வருடத்திற்கு பின்பே எங்கள் திருமணம் நடைபெறும்.
என் வாழ்வில் இன்னொருவரை காதலனாக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.
காதலனை மணக்கப் போகிறேன்: விசாகா சிங் அதிரடி முடிவு
No comments:
Post a Comment