Monday, 29 July 2013

சுந்தர்.சி ஜோடியாகும் நயன்தாரா?


nayanthara



கொலிவுட்டில் 'கலகலப்பு', 'தீயா வேலை செய்யணும் குமாரு' படங்களின் வெற்றிக்குப் பின்பு அடுத்த பட வேலைகளில் பிஸியாகி விட்டார் சுந்தர்.சி.



மெடி ஃபார்முலா தான் தமிழ்சினிமாவின் தற்போதைய டிரெண்ட் என்பதால் இளம் முன்னணி நாயகர்கள் சுந்தர்.சி-யின் இயக்கத்தில் நடிக்க போட்டி போடுகின்றனர்.



இதனால் சிலாகித்துப்போன சுந்தர்.சி, எல்லா நாயகர்களுக்கும் டாட்டா காட்டிவிட்டு தானே நாயகனாகிவிட்டார்.



'அரண்மனை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சுந்தர்.சி. தனக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கப் போகிறாராம்.



'ஜெயம்' ரவியுடன் நடிக்கவே ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார் நயன்.



சுந்தர்.சி-யுடன் நடிக்க எவ்வளவு கேட்கப் போகிறாரோ..?



'எவ்வளவு கேட்டாலும் பரவாயில்லை, கொடுத்துடலாம்' என்ற முடிவில் இருக்கிறாராம் இயக்குனர்.



சுந்தர்.சி ஜோடியாகும் நயன்தாரா?

No comments:

Post a Comment