Tuesday, 9 July 2013

மலையாளத்தில் ஆபாசமாக நடிக்கிறேனா?: இனியா பாய்ச்சல்


 



iniya-malayalam-movie



 



 



தமிழில் வாகை சூடவா படத்தில், விமல் ஜோடியாக அறிமுகம் ஆனவர் இனியா. பெயருக்கு தக்கவாறே மௌன குரு, அம்மாவின் கைப்பேசி, மாசாணி மற்றும் சென்னையில் ஒரு நாள் என பல இனிய படங்களில் நடித்திருந்த போதும், சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய வாய்ப்புகள் வரவில்லை இவருக்கு.



பெரிய ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் என எதுவுமே கிடைக்காததால், அம்மணியின் ‘சாரக் காற்று' தற்போது கேரளா பக்கம் திரும்பியுள்ளது. மலையாளப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இனியா, அங்கு மிக தாராளமாக கவர்ச்சி காட்ட இருப்பதாக வதந்திகள் நிலவி வருகின்றன.



இத்தகைய வதந்திகளை மறுத்துள்ள இனியா, இது குறித்து அளித்துள்ள விளக்கத்தில்…



நான் மோசமாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ், மலையாள பட உலகில் என் சினிமா வாழ்க்கை நன்றாகவே போய் கொண்டு இருக்கிறது.



சினிமாவில் வெற்றி பெற நெருக்கமான சீன்களில் நடிக்க வேண்டும் என்பது இல்லை.



மலையாள படத்தில் பாடகி கேரக்டரில் நான் நடிக்கிறேன் ஒரு சீனில் கூட அதில் ஆபாசமாக நடிக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.



 


மலையாளத்தில் ஆபாசமாக நடிக்கிறேனா?: இனியா பாய்ச்சல்

No comments:

Post a Comment