திருமணம் செய்து கொள்ளப் பிடிக்கவில்லை. ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என்று நடிகை ஸ்ருதிஹாஸன் பேட்டி கொடுத்து அதிர வைத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாஸனின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாஸன் சமீபத்தில் திருமணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், "எனது சுதந்திரத்தை எதற்காகவும் யாருக்காவும் இழக்க விரும்பவில்லை. நல்ல, அன்பான ஆண் துணை கிடைப்பது கடினமாக உள்ளது.
என்னை என் போக்கில் ஏற்கும் ஆண் கிடைப்பாரா என்பது சந்தேகம்தான். உறவு என்ற பெயரில் என் சுதந்திரத்தை யாரும் களவாடிவிடக் கூடாது. இதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. எனக்கு திருமணத்திலோ, கேர்ள் பிரண்ட் போன்ற உறவுகளிலோ நம்பிக்கையில்லை.
ஆனால் குழந்தைகள் ரொம்பப் பிடிக்கும். குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது. ஏன் என்று காரணம் புரியவில்லை," என்றார்.
திருமணம் வேண்டாம்... ஆனா.. குழந்தை பெத்துகணும்! - ஸ்ருதி ஹாஸன்
No comments:
Post a Comment