சினிமாக்காரர்கள் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றால், அது உண்மையாகப் போகிறது என்று அர்த்தம். சில தினங்களுக்கு முன்பு தனக்கும் சிம்புவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நாங்க சும்மா ப்ரண்ட்ஸ் மட்டும்தான் என ஸ்டேட்மெண்ட் விட்டிருந்தார் ஹன்சிகா.
இப்போது தலைகீழ். இன்று சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவுக்கும் தனக்கும் உள்ள உறவை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். 'ஆமா, சிம்புவை நான் விரும்புகிறேன். ஆனால் அதெல்லாம் பர்சனல் விஷயம். யாருடனும் விவாதிக்க முடியாது,' என்று கூறியிள்ளார்.
ஹன்சிகா சொன்னதை உறுதிப்படுத்தி சிம்புவும் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் "ஆமா… நான் இப்போ ஹன்சிகா கூடத்தான் இருக்கேன். அவர் ரொம்ப நல்ல பொண்ணு. திருமணம் பற்றி விரைவில் வீட்டில் முடிவு செய்வார்கள். எங்கள் பிரைவசிக்கு மரியாதை கொடுங்க," என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் இப்போ ஹன்சிகா கூடத்தான் இருக்கேன்
No comments:
Post a Comment