Monday, 15 July 2013

அஜீத் படத்துக்குப் பெயர் பறவை... இதுவாவது நிலைக்குமா?


ajith_in_valai



 



 



விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு பறவை என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏஎம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த பிறகும் கூட இன்னமும் அதன் தலைப்பு அறிவிக்கப்படவில்லை.



 



முதலில் இந்தப் படத்துக்கு வலை என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் அதனை இயக்குநர் விஷ்ணுவர்தன் மறுத்தார். எனவே தொடர்ந்து அஜீத் 53 என்றே இந்தப் படத்தைக் குறிப்பிட்டு வந்தனர் மீடியாவில். இதோ அதோ என தலைப்பு சூடும் படலம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையில் பறவை என அந்தப் படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



 



ஆனால் இன்னமும் அதனை விஷ்ணுவர்தன் தரப்பு உறுதி செய்யவில்லை. இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆர்யா – டாப்ஸி இன்னொரு ஜோடி. சந்தானமும் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் பா விஜய் 5 பாடல்களை எழுதியுள்ளார்.



 



அஜீத் படத்துக்குப் பெயர் பறவை... இதுவாவது நிலைக்குமா?

No comments:

Post a Comment