எங்க அப்பா அம்மா சம்மதத்துடன் ஹன்சிகாவைத் திருமணம் செய்து கொள்வேன். அஜீத் – ஷாலினி மாதிரி நானும் ஹன்சிகாவும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம், என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
சிலம்பரசன் என்கிற சிம்புவுடன் தொடர்ந்து வேட்டை மன்னன் மற்றும் வாலு ஆகிய இரு படங்களில் ஹன்சிகா ஹீரோயினாக ஒப்பந்தமானபோதே, இருவருக்கும் காதல் என்ற செய்தி வரும் என பலரும் எதிர்ப்பார்த்தனர். எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல், சீக்கிரமே உண்மையை ஒப்புக் கொண்டனர் இருவரும். அதுமட்டுமல்ல, திருமணப் பேச்சை கூட ஆரம்பித்துள்ளனர்.
சிலம்பரசன் கூறுகையில், "நானும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் மிக தீவிரமாக காதலித்து வருகிறோம். உயிருக்கு உயிராக பழகி வருகிறோம். நான், ஹன்சிகாவுடன்தான் இருக்கிறேன்.
என் பெற்றோர்கள் சம்மதத்துடன், நான் ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன். எங்கள் இருவருக்கும் திருமணம் நடப்பது உறுதி. அநேகமாக அடுத்த ஆண்டு நடக்கலாம்.
அஜீத் ஷாலினி மாதிரி, நானும் ஹன்சிகாவும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்
No comments:
Post a Comment