ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் மோசடியில் சிக்கி, கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் வந்துள்ள பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் புதிய மலையாளப் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு பிக் பிக்சர் என்று தலைப்பிட்டுள்ளனர். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.
படத்தில் நடிப்பது குறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில், "கிரிக்கெட் மாதிரியில்லை சினிமா. நடிப்பது ரொம்ப சவாலான வேலை. ஆனால் அந்த சவாலை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்," என்றார். இந்தப் படத்தை பாலச்சந்திர குமார் என்பவர் இயக்குகிறார். ஸ்ரீசாந்த் சினிமாவில் நடிப்பது இது முதல் முறையல்ல. அவர் ஏற்கெனவே மழவில்லினாட்டம் வரே என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனால் ஸ்பாட் பிக்ஸிங் ஊழலில் அவர் கைதானதும் அந்தப் படத்திலிருந்து அவரது காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டார் படத்தின் இயக்குநர்
ஹீரோவாகிறார் ஸ்பாட் பிக்சிங் புகழ் ஸ்ரீசாந்த் - படத்தின் தலைப்பு 'பிக் பிக்சர்'!
No comments:
Post a Comment