‘ஹாட்ரிக் ஹிட் ஹீரோ’ விஜய் சேதுபதியின் போக்கில் எக்கச்சக்க மாற்றம்… விஜய் சேதுபதி முன்புபோல் யாரிடமும் சகஜமாக பேசுவதில்லை.. அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றிவிடுகிறார்… ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்கு கையடக்க காலண்டர் அடித்துக்கொண்டு கோலிவுட் வீதிகளில் அகப்படுபவர்களிடமெல்லாம் அன்பொழுக பேசி அந்த காலண்டரை கையில் திணித்து இந்த வருஷம் நம்ம வருஷமாக வாழ்த்துங்கள்… என ஆசி பெற்ற விஜய் சேதுபதியயா இது? என அவரது மாற்றம் கண்டு மூக்கின்மேல் விரல் வைப்பவர்களின் கனிவான கவனத்திற்கு…
‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை தொடர்ந்து அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தக்காணோம், ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’ உள்ளிட்ட படங்களின் ஹாட்ரிக் வெற்றி அல்லவாம்… அப்புறம் பின்னே…?! சில வருடங்களுக்கு முன் காலம் தவறிய விஜய் சேதுபதியின் அப்பாவும் அவர் வாங்கிய கடன்களும்தான் காரணமாம்! ஆமாம் பின்னே..?! விஜய் சேதுபதி ஆரம்பித்ததும் ‘‘அப்பா கொஞ்சம் பணம் தரனணும் தம்பி’ என கையில் அத்தாட்சியுடனும், அத்தாட்சி, தகுந்த சாட்சி எதுவும் இல்லாமலும் நிறையபேர் விஜய் சேதுபதி வீட்டு வாசலில் கியூ கட்டி நிற்காத குறையாக வந்துபோக ஆரம்பித்துவிட்டனராம். சென்னை வடபழநி பகுதியில் கன்ஸ்ட்ரக்ஷன் பிசினசில் சில பல லட்சங்கள் நஷ்டப்பட்டு போன விஜய் சேதுபதியின் அப்பா சிலரிடம் கடன்பட்டிருந்தது உண்மைதான் என்றாலும் ஆளாளுக்கு என்று… வந்து நின்றதில் மனிதர் விக்கித்துப் போய்விட்டாராம்! அதன் விளைவுதான், விஜய் சேதுபதியின் போக்கில் இப்படி நிறைய மாற்றங்கள் என்கிறது விவரமறிந்த வட்டாரம்! நெசந்தானா விஜய் சேதுபதி?!
யார் விஜய் சேதுபதியின் மாற்றம் காரணம்?
No comments:
Post a Comment