சென்னை: இன்றைய தேதியில் அனைத்து படங்களிலும் காமெடி பண்ணும் நடிகர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு கம்பி கட்டும் வேலை செய்தாராம். கோலிவுட்டின் பிசியான காமெடி நடிகர் என்றால் அனைவரும் சொல்வது அந்த சந்தன நடிகரின் பெயரைத் தான்.
காமெடியில் புகுந்து விளையாடும் அவர் நடிக்க வரும் முன்பு கம்பி கட்டும் வேலை செய்தாராம். அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து தற்போது கை நிறைய சம்பாதிக்கிறார். எந்த பகுதியில் கம்பி கட்டும் வேலை செய்தாரோ தற்போது அதே பகுதியில் பெரிய பங்களா வாங்கிப் போட்டிருக்கிறாராம். இது தவிர நகரின் மைய பகுதியிலும் ஒரு பங்களா வாங்கியுள்ளாராம்.
காமெடியில் சம்பாதிக்கும் பணத்தை அசையா சொத்துக்களில் முதலீடு செய்து வருகிறாராம். ரியல் எஸ்டேட் விலை தான் நாளுக்கு நாளுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறதால் அதில் முதலீடு செய்கிறாரோ. பிழைக்கத் தெரிந்த மனிதர் தான்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்னாள் கம்பி கட்டும் வேலை செய்த காமெடி நடிகர்
No comments:
Post a Comment