Wednesday, 19 June 2013

சித்தார்த்தின் பெற்றோரை சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கிய சமந்தா!


samantha



நடிகர் சித்தார்த்தின் பெற்றோரை நேரில் சந்தித்து தங்கள் திருமணத்துக்கு சம்மதம் பெற்றார் சமந்தா என செய்திகள் பரபரக்க ஆரம்பித்துள்ளன.



இதன் மூலம் சித்தார்த்-சமந்தா திருமணம் நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது. சிந்துபாதின் கதையைப்போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது சித்தார்த்தின் காதல் விவகாரம். ஏற்கெனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்த சித்தார்த், அதன் பிறகு நான்கு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஸ்ருதியுடன் ஒன்றாக குடும்பம் நடத்தியதாகக் கூட பேசப்பட்டது.



இந்த நிலையில் புதிதாக சமந்தாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் சமந்தாவின் பெற்றோர் இந்தக் காதலை ஏற்கவில்லை. சித்தார்த்தின் பெற்றோருக்கும் இதில் சம்மதமில்லையாம். இதையடுத்து பெற்றோரை சமரசபடுத்தி சம்மதம் வாங்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டனர்.



சமந்தா நேரடியாக சித்தார்த் வீட்டுக்கு சென்று, அவரது பெற்றோரை சந்தித்தார். நீண்ட நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.



சித்தார்த் உறவினர்களையும் சந்தித்து விட்டு திரும்பினார். நீண்ட யோசனைக்கு பிறகு சித்தார்த் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர். கைவசம் உள்ள படங்கள் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தில் உள்ளாராம் சமந்தா



சித்தார்த்தின் பெற்றோரை சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கிய சமந்தா!

No comments:

Post a Comment