Tuesday, 30 July 2013

Arya & Anushka in love?


arya_anushka



The industry buzz is that the lead pair of Selvaraghavan's next movie, Irandam Ulagam,  Arya and Anusha is more than just co-stars. The duo recently made a public appearance at Suriya's Singam-2 success party in Chennai. They flew in together from Hyderabad and were seen hanging out together till the next day morning. 



Moreover, rumours are that Arya spends a lot of time Hyderabad when he is not shooting. There has been no confirmation from the actors or sources close to them. So we will have to wait and see, if the news is indeed true or just another rumour. 



Arya & Anushka in love?

Monday, 29 July 2013

ஜில்லாவில் விஜய்க்கு சம்பளம் ரூ.20 கோடி


actor vijay



கொலிவுட்டில் தலைவா படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய், ஜில்லா படத்தில் நடித்து வருகிறார்.



இப்படத்தில் விஜய்க்கு சம்பளமாக ரூ.20 கோடியாக பேசப்பட்டுள்ளதாம்.



ரஜினி, கமல் போன்ற முன்னணி கதாநாயகர்கள், தங்களின் நூறாவது படத்தில் கூட கோடி ரூபாயை சம்பளமாக பெற்றதில்லையாம்.



ஆனால் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உட்பட பலருக்கும் கோடி ரூபாய் சம்பளம் ஆரம்பத்திலேயே கிடைத்துவிட்டது.



விஜய்யின் பூவே உனக்காக படம் வரை உயராத சம்பளம் காதலுக்கு மரியாதை படத்திற்கு பின்பு அதிகமாக உயர்ந்ததாம்.



தலைவா படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ.18 கோடி என்றும் அதற்கு அடுத்த படமான ஜில்லாவில் இவருக்கு ரூ.20 கோடிக்கு மேல் பேசப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



ஜில்லாவில் விஜய்க்கு சம்பளம் ரூ.20 கோடி

சுந்தர்.சி ஜோடியாகும் நயன்தாரா?


nayanthara



கொலிவுட்டில் 'கலகலப்பு', 'தீயா வேலை செய்யணும் குமாரு' படங்களின் வெற்றிக்குப் பின்பு அடுத்த பட வேலைகளில் பிஸியாகி விட்டார் சுந்தர்.சி.



மெடி ஃபார்முலா தான் தமிழ்சினிமாவின் தற்போதைய டிரெண்ட் என்பதால் இளம் முன்னணி நாயகர்கள் சுந்தர்.சி-யின் இயக்கத்தில் நடிக்க போட்டி போடுகின்றனர்.



இதனால் சிலாகித்துப்போன சுந்தர்.சி, எல்லா நாயகர்களுக்கும் டாட்டா காட்டிவிட்டு தானே நாயகனாகிவிட்டார்.



'அரண்மனை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சுந்தர்.சி. தனக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கப் போகிறாராம்.



'ஜெயம்' ரவியுடன் நடிக்கவே ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார் நயன்.



சுந்தர்.சி-யுடன் நடிக்க எவ்வளவு கேட்கப் போகிறாரோ..?



'எவ்வளவு கேட்டாலும் பரவாயில்லை, கொடுத்துடலாம்' என்ற முடிவில் இருக்கிறாராம் இயக்குனர்.



சுந்தர்.சி ஜோடியாகும் நயன்தாரா?

Sunday, 28 July 2013

கௌதம் படத்தில் சூர்யாவுக்கு பதில் சிம்பு


simbu



கௌதம் மேனன் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக சிம்பு நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.



கௌதம் மேனன், சூர்யா ஜோடி என்றாலே தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அதே எதிர்பார்ப்புடன் தான் துருவ நட்சத்திரம் படமும் அறிவிக்கப்பட்டது.



சூர்யா ஒரு படத்தில் ஒப்பந்தமானால் நேரத்தை சரியாக கடைபிடிப்பார். ஆனால் முதன்முறையாக துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பதற்கு அவர் தயக்கம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



இப்படத்திற்கான பூஜையில் சூர்யா கலந்து கொண்டாலும், லிங்குசாமியின் படத்தில் நடிக்க இருப்பதால் கௌதம் மேனனை காத்திருக்க சொல்லியுள்ளார். இதனால் துருவ நட்சத்திரம் படத்தை கவுதம் மேனன் டிராப் செய்துள்ளாராம்.



இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்திற்கு பதிலாக கவுதம் மேனன் விண்ணைதாண்டி வருவாயா கதாநாயகன் சிம்புவை வைத்து புதிய கதை ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



கௌதம் படத்தில் சூர்யாவுக்கு பதில் சிம்பு

Saturday, 27 July 2013

காதலனை மணக்கப் போகிறேன்: விசாகா சிங் அதிரடி முடிவு


 



visaka-singh



 



கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங், தனது காதலனை மணக்கப் போவதாக பகிரங்கமாக கூறியுள்ளார்.



சமீபத்தில் சிம்புவை காதலிப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஹன்சிகா மோத்வானி.



அவரைத் தொடர் ந்து தற்போது விசாகா சிங், தன்னுடைய காதலனை பற்றி வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.



இவர் தற்போது வாலிப ராஜா என்ற படத்தில் நடிப்பதுடன், இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.



தனது காதல் குறித்து விசாகா கூறுகையில், மிகவும் ஆழமாக காதலித்துக் கொண்டிருக்கும் நான் என் காதலையும், காதலனையும் மறுக்க மாட்டேன்.



குழந்தை பருவத்திலிருந்தே நாங்கள் காதலித்து வருகிறோம். அவர் யார் என்பது தற்போது ரகசியமாகவே இருக்கட்டும்.



மிகவும் கனிவான அவரை காதலனாக அடைந்தது எனது அதிர்ஷ்டம். 3 வருடத்திற்கு பின்பே எங்கள் திருமணம் நடைபெறும்.



என் வாழ்வில் இன்னொருவரை காதலனாக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.



காதலனை மணக்கப் போகிறேன்: விசாகா சிங் அதிரடி முடிவு

Friday, 26 July 2013

ilayathalapathy vijay speach at thalaivaa audio Launch


thalaiva_in_vijay



 





ilayathalapathy vijay speach at thalaivaa audio Launch

அஞ்சலி வரவால் ஆடிப்போன டாப்ஸி

tapsee Pannu


தமிழில் பெரிதாக படவாய்ப்புகள் இல்லாததால் சென்னைக்கே வருவதில்லை நடிகை அஞ்சலி.


இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தன்னுடைய கங்கா மற்றும் முனி பார்ட்-3 படத்தில் அஞ்சலியை நடிக்க வைப்பதற்கு முடிவு செய்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து இதில் கதாநாயகியாக டாப்ஸி நடிக்கின்றார். கூடவே கோவை சரளா, மனோபாலா, மயில்சாமி, சாம்ஸ் ஆகிய பலரும் இருக்கிறார்கள்.


இப்படத்தின் இரண்டாவது பகுதியில் அஞ்சலி இடம் பெறும் காட்சிகள் வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.


படத்தில் அஞ்சலியின் திடீர் வருகையால் தனக்கான படக்காட்சிகளில் மாற்றம் ஏற்பட்டு விடுமோ என்ற கவலையில் உள்ளாராம் டாப்ஸி.


தமிழ்ப்படத்தில் அஞ்சலி மீண்டும் கங்கா படத்தின் மூலம் கலக்க வருகிறார்.



அஞ்சலி வரவால் ஆடிப்போன டாப்ஸி

Thursday, 25 July 2013

நஸ்ரியாவை கண்டு பயப்படும் நயன்


 



Nazriya-Nazim



 



இதனால் தன்னை தேடி வரும் வாய்ப்புகளில், ஒரு சில கதைகளுக்கு மட்டுமே ஓ.கே சொல்கிறாராம்.



பல படங்களை கதை பிடிக்கவில்லை அல்லது ஹீரோ சரியில்லை போன்ற காரணங்களை சொல்லி ஓரங்கட்டி விடுகிறாராம்.



இந்நிலையில் நயன்தாரா வேண்டாம் என்று கூறிய கதைகள், நஸ்ரியா நஸீமை தேடிச் செல்கிறதாம்.



அத்துடன் அடுத்த நயன்தாரா இவர் தான் என கூறி நஸ்ரியாவுக்கு பில்டப் கொடுத்து வருகிறார்களாம்.



ஆரம்பித்தில் இதையெல்லாம் கண்டுகொள்ளாத நயன், தற்போது நஸ்ரியா தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்வதால் பயங்கர டென்ஷனாக இருக்கிறாராம்.



நஸ்ரியாவை கண்டு பயப்படும் நயன்

Wednesday, 24 July 2013

காக்கிச் சட்டையில் வரும் தல, தளபதி


 



ajith-and-vijay



 



 



அஜீத் குமார் விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்திலும், விஜய் ஜில்லாவிலும் போலீசாக நடிக்கிறார்களாம். இது போலீஸ் சீசன் போன்று. சூர்யா போலீஸாக நடித்துள்ள சிங்கம் 2 படம் நல்ல வசூலை கொடுத்துள்ளது. இதையடுத்து சிங்கம் 3 வரும் என்று கூட பேச்சு அடிபடுகிறது.



சூர்யாக முன்னதாக காக்க காக்க படத்தில் அன்புச்செல்வன் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்புச்செல்வன் ஐபிஎஸ் கதாபாத்திரத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.



நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக வருகிறாராம்.



விஷ்ணுவரதன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படத்தின் தலைப்பு பறவை இல்லையாம். படத்தின் பெயர் ஆரம்பம்



 


காக்கிச் சட்டையில் வரும் தல, தளபதி

Tuesday, 23 July 2013

அஜீத் ஷாலினி மாதிரி, நானும் ஹன்சிகாவும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்


 



simbu-hansika



 



 



எங்க அப்பா அம்மா சம்மதத்துடன் ஹன்சிகாவைத் திருமணம் செய்து கொள்வேன். அஜீத் – ஷாலினி மாதிரி நானும் ஹன்சிகாவும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம், என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.



சிலம்பரசன் என்கிற சிம்புவுடன் தொடர்ந்து வேட்டை மன்னன் மற்றும் வாலு ஆகிய இரு படங்களில் ஹன்சிகா ஹீரோயினாக ஒப்பந்தமானபோதே, இருவருக்கும் காதல் என்ற செய்தி வரும் என பலரும் எதிர்ப்பார்த்தனர். எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல், சீக்கிரமே உண்மையை ஒப்புக் கொண்டனர் இருவரும். அதுமட்டுமல்ல, திருமணப் பேச்சை கூட ஆரம்பித்துள்ளனர்.



சிலம்பரசன் கூறுகையில், "நானும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் மிக தீவிரமாக காதலித்து வருகிறோம். உயிருக்கு உயிராக பழகி வருகிறோம். நான், ஹன்சிகாவுடன்தான் இருக்கிறேன்.



என் பெற்றோர்கள் சம்மதத்துடன், நான் ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன். எங்கள் இருவருக்கும் திருமணம் நடப்பது உறுதி. அநேகமாக அடுத்த ஆண்டு நடக்கலாம்.



 


அஜீத் ஷாலினி மாதிரி, நானும் ஹன்சிகாவும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்

Monday, 22 July 2013

ஜில்லாவில் போலீசா வர்றாராம் விஜய்


 



jilla movie shooting in chennai



 



துப்பாக்கியில் ராணுவ வீரர், தலைவாவில் 'அரசியல் புள்ளி' என நடித்த விஜய், அடுத்த படமான ஜில்லாவில் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.



சமீபத்தில் சென்னை ஆவடியில் உள்ள காவலர் மைதானத்தில் விஜய்யும் மற்றவர்களும் பங்கேற்ற காட்சியைப் பார்த்த சிலர் வெளியிட்ட தகவலில் அடிப்படையில் இந்த செய்தி பரவி வருகிறது. ஜில்லா படத்தை முருகா படம் இயக்கிய நேசன் இயக்குகிறார். விஜய்க்கு மீண்டும் இந்தப் படத்தில் ஜோடியாகியுள்ளார் காஜல் அகர்வால்.



முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.



படம் மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் விஜய் முஸ்லிம் இளைஞராக நடிக்கிறார் என முதலில் செய்தி வெளியாகி, பலவிதமான கமெண்ட்கள் பறக்க காரணமானது நினைவிருக்கலாம். ஏற்கெனவே போக்கிரி படத்தில் போலீசாக சில காட்சிகளில் தோன்றினார் விஜய் என்பது நினைவிருக்கலாம்.



ஜில்லாவில் போலீசா வர்றாராம் விஜய்

Saturday, 20 July 2013

நான் இப்போ ஹன்சிகா கூடத்தான் இருக்கேன்


 



simbhu_and_hansika



 



 



சினிமாக்காரர்கள் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றால், அது உண்மையாகப் போகிறது என்று அர்த்தம். சில தினங்களுக்கு முன்பு தனக்கும் சிம்புவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.



நாங்க சும்மா ப்ரண்ட்ஸ் மட்டும்தான் என ஸ்டேட்மெண்ட் விட்டிருந்தார் ஹன்சிகா.



இப்போது தலைகீழ். இன்று சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவுக்கும் தனக்கும் உள்ள உறவை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். 'ஆமா, சிம்புவை நான் விரும்புகிறேன். ஆனால் அதெல்லாம் பர்சனல் விஷயம். யாருடனும் விவாதிக்க முடியாது,' என்று கூறியிள்ளார்.



ஹன்சிகா சொன்னதை உறுதிப்படுத்தி சிம்புவும் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் "ஆமா… நான் இப்போ ஹன்சிகா கூடத்தான் இருக்கேன். அவர் ரொம்ப நல்ல பொண்ணு. திருமணம் பற்றி விரைவில் வீட்டில் முடிவு செய்வார்கள். எங்கள் பிரைவசிக்கு மரியாதை கொடுங்க," என்று குறிப்பிட்டுள்ளார்.



 



நான் இப்போ ஹன்சிகா கூடத்தான் இருக்கேன்

Thursday, 18 July 2013

விஜய் சும்மா பாராட்டமாட்டார் - தனுஷ்


 



actor dhanush



 



 



தன்னை நல்ல நடிகர் என்று பாராட்டிய விஜய்க்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். விஜய் பிற நடிகர்களின் படத்தை பார்த்து அது நன்றாக இருந்தால் அவர்களை தொடர்பு கொண்டு பாராட்டுவார்.



கோலிவுட்டின் முன்னணி நடிகரான அவர் தனுஷ் தன்னை விட சிறந்த நடிகர் என்று மனதில் பட்டதை பட்டென்று தெரிவித்தார். விஜய் புகழ்ந்ததையடுத்து வட இந்திய ஊடகங்களும் தனுஷை புகழ்ந்து வருகின்றன. காரணம் ராஞ்ஹனாவில் அவரது எதார்த்தமான நடிப்பு.



 


விஜய் சும்மா பாராட்டமாட்டார் - தனுஷ்

Wednesday, 17 July 2013

தலைப்பில் என் பெயரும் வேண்டாம், பில்டப்பும் வேண்டாம்


 



 



ajith_untitled_movie



 



 



அஜீத் குமார் தனது படத் தலைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று இயக்குனர்களுக்கு தெரிவித்துள்ளார்.



அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படத்திற்கு வலை என்று பெயர் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தனர்.



இந்நிலையில் அஜீத் படத்திற்கு புதிய தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.



விஷ்ணுவர்தன் படத்தின் தலைப்பில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரியவில்லை. தலைப்பை அறிவிப்பேனா என்று அடம்பிடிக்கிறார்களே.



தனது கதாபாத்திரத்தின் பெயரையோ அல்லது பில்டப் கொடுக்கும் தலைப்பையோ தனது படத்தின் தலைப்பாக வைக்கவே கூடாது என்று அஜீத் குமார் இயக்குனர்களுக்கு உத்தரவு போட்டுள்ளாராம்.



 


தலைப்பில் என் பெயரும் வேண்டாம், பில்டப்பும் வேண்டாம்

Tuesday, 16 July 2013

சூர்யா கொடுத்த பார்ட்டியில் ஆர்யாவுடன் அனுஷ்கா ஆட்ட


 



 



 



 



arya_anushka



 



 



சிங்கம் 2 வெற்றியைக் கொண்டாட சூர்யா கொடுத்த பார்ட்டியில் அனுஷ்கா ஆர்யாவுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டாராம். சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானத்தை வைத்து ஹரி இயக்கிய சிங்கம் 2 வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த வெற்றியை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சூர்யா பார்ட்டி கொடுத்தார். பார்ட்டிக்கு பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.



பார்ட்டிக்கு இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், இயக்குனர்கள் லிங்குசாமி, கௌதம் மேனன், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், நடிகர்கள் பிரபு, தனுஷ், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா ஆகியோர் வந்திருந்தனர்.



இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள அனுஷ்கா ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்தார். வெள்ளிக்கிழமை இரவு துவங்கிய பார்ட்டி மறுநாள் காலை வரை நடந்துள்ளது. பார்ட்டி துவங்கியதில் இருந்து முடியும் வரை அனுஷ்கா ஆர்யாவின் கையை பிடித்துக் கொண்டே சுற்றினாராம்.



மேலும் ஆர்யாவுடன் சேர்ந்து அதிர வைக்கும் ஆட்டமும் போட்டாராம். அவர்களுடன் சேர்ந்து லிங்குசாமியும் டான்ஸ் ஆடினாராம். இந்த ஆர்யாவை புரிந்துகொள்ளவே முடியவில்லையே!



 


சூர்யா கொடுத்த பார்ட்டியில் ஆர்யாவுடன் அனுஷ்கா ஆட்ட

Monday, 15 July 2013

அஜீத் படத்துக்குப் பெயர் பறவை... இதுவாவது நிலைக்குமா?


ajith_in_valai



 



 



விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு பறவை என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏஎம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த பிறகும் கூட இன்னமும் அதன் தலைப்பு அறிவிக்கப்படவில்லை.



 



முதலில் இந்தப் படத்துக்கு வலை என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் அதனை இயக்குநர் விஷ்ணுவர்தன் மறுத்தார். எனவே தொடர்ந்து அஜீத் 53 என்றே இந்தப் படத்தைக் குறிப்பிட்டு வந்தனர் மீடியாவில். இதோ அதோ என தலைப்பு சூடும் படலம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையில் பறவை என அந்தப் படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



 



ஆனால் இன்னமும் அதனை விஷ்ணுவர்தன் தரப்பு உறுதி செய்யவில்லை. இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆர்யா – டாப்ஸி இன்னொரு ஜோடி. சந்தானமும் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் பா விஜய் 5 பாடல்களை எழுதியுள்ளார்.



 



அஜீத் படத்துக்குப் பெயர் பறவை... இதுவாவது நிலைக்குமா?

Friday, 12 July 2013

ஹீரோவாகிறார் ஸ்பாட் பிக்சிங் புகழ் ஸ்ரீசாந்த் - படத்தின் தலைப்பு 'பிக் பிக்சர்'!


sreesanth_in_malayalam_movie



 



ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் மோசடியில் சிக்கி, கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் வந்துள்ள பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் புதிய மலையாளப் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு பிக் பிக்சர் என்று தலைப்பிட்டுள்ளனர். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.



படத்தில் நடிப்பது குறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில், "கிரிக்கெட் மாதிரியில்லை சினிமா. நடிப்பது ரொம்ப சவாலான வேலை. ஆனால் அந்த சவாலை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்," என்றார். இந்தப் படத்தை பாலச்சந்திர குமார் என்பவர் இயக்குகிறார். ஸ்ரீசாந்த் சினிமாவில் நடிப்பது இது முதல் முறையல்ல. அவர் ஏற்கெனவே மழவில்லினாட்டம் வரே என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனால் ஸ்பாட் பிக்ஸிங் ஊழலில் அவர் கைதானதும் அந்தப் படத்திலிருந்து அவரது காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டார் படத்தின் இயக்குநர்



 


ஹீரோவாகிறார் ஸ்பாட் பிக்சிங் புகழ் ஸ்ரீசாந்த் - படத்தின் தலைப்பு 'பிக் பிக்சர்'!

Wednesday, 10 July 2013

திருமணம் வேண்டாம்... ஆனா.. குழந்தை பெத்துகணும்! - ஸ்ருதி ஹாஸன்


Shruti-Hassan



 



திருமணம் செய்து கொள்ளப் பிடிக்கவில்லை. ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என்று நடிகை ஸ்ருதிஹாஸன் பேட்டி கொடுத்து அதிர வைத்துள்ளார்.



 



நடிகர் கமல்ஹாஸனின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாஸன் சமீபத்தில் திருமணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், "எனது சுதந்திரத்தை எதற்காகவும் யாருக்காவும் இழக்க விரும்பவில்லை. நல்ல, அன்பான ஆண் துணை கிடைப்பது கடினமாக உள்ளது.



 



என்னை என் போக்கில் ஏற்கும் ஆண் கிடைப்பாரா என்பது சந்தேகம்தான். உறவு என்ற பெயரில் என் சுதந்திரத்தை யாரும் களவாடிவிடக் கூடாது. இதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. எனக்கு திருமணத்திலோ, கேர்ள் பிரண்ட் போன்ற உறவுகளிலோ நம்பிக்கையில்லை.



 



ஆனால் குழந்தைகள் ரொம்பப் பிடிக்கும். குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது. ஏன் என்று காரணம் புரியவில்லை," என்றார்.



 


திருமணம் வேண்டாம்... ஆனா.. குழந்தை பெத்துகணும்! - ஸ்ருதி ஹாஸன்

Tuesday, 9 July 2013

மலையாளத்தில் ஆபாசமாக நடிக்கிறேனா?: இனியா பாய்ச்சல்


 



iniya-malayalam-movie



 



 



தமிழில் வாகை சூடவா படத்தில், விமல் ஜோடியாக அறிமுகம் ஆனவர் இனியா. பெயருக்கு தக்கவாறே மௌன குரு, அம்மாவின் கைப்பேசி, மாசாணி மற்றும் சென்னையில் ஒரு நாள் என பல இனிய படங்களில் நடித்திருந்த போதும், சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய வாய்ப்புகள் வரவில்லை இவருக்கு.



பெரிய ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் என எதுவுமே கிடைக்காததால், அம்மணியின் ‘சாரக் காற்று' தற்போது கேரளா பக்கம் திரும்பியுள்ளது. மலையாளப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இனியா, அங்கு மிக தாராளமாக கவர்ச்சி காட்ட இருப்பதாக வதந்திகள் நிலவி வருகின்றன.



இத்தகைய வதந்திகளை மறுத்துள்ள இனியா, இது குறித்து அளித்துள்ள விளக்கத்தில்…



நான் மோசமாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ், மலையாள பட உலகில் என் சினிமா வாழ்க்கை நன்றாகவே போய் கொண்டு இருக்கிறது.



சினிமாவில் வெற்றி பெற நெருக்கமான சீன்களில் நடிக்க வேண்டும் என்பது இல்லை.



மலையாள படத்தில் பாடகி கேரக்டரில் நான் நடிக்கிறேன் ஒரு சீனில் கூட அதில் ஆபாசமாக நடிக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.



 


மலையாளத்தில் ஆபாசமாக நடிக்கிறேனா?: இனியா பாய்ச்சல்

Sunday, 7 July 2013

Ajith in Dayanidhi Marriage




Ajith in Dayanidhi Marriage

முருகதாஸ், கௌதமை விட ஹரியுடன் பணிபுரிவது தான் வசதியாக இருக்கு: சூர்யா


 



director-hari



 



 



கௌதம் மேனன், முருகதாஸுடன் ஒப்பிடுகையில் ஹரி தான் மிகவும் பிரண்ட்லியானவர் என்றும், அவருடன் பணிபுரிவது மிகவும் வசதி என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்



கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக உள்ள சூர்யாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் விருப்பமாக உள்ளனர். இந்நிலையில் அவர் 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்குகிறார்.



சூர்யாவின் திரையுல வாழ்வில் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த இயக்குனர்களில் ஹரி, ஏ.ஆர். முருகதாஸ், கௌதம் மேனனுக்கு முக்கிய பங்கு உண்டு.



 



முருகதாஸ், கௌதமை விட ஹரியுடன் பணிபுரிவது தான் வசதியாக இருக்கு: சூர்யா

Wednesday, 3 July 2013

வாடகைத் தாய் மூலம் ஷாரூக்கானுக்கு ஆண்குழந்தை - உறுதி செய்தார் கவுரி கான்


 



shah-rukh-khan-gauri-khan



 



 



மும்பை: ஷாரூக்கானுக்கு வாடகைத் தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அந்தக் குழந்தை நலமுடன் தங்களிடம் இருப்பதாகவும் கவுரி கான் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலமாக பரபரப்பை ஏற்படுத்திய ஷாருக்கானின் வாடகைத்தாய் குழந்தை பற்றிய முழு தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 27ஆம் தேதி, அந்தேரியில் உள்ள மஸ்ரானி பெண்கள் மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்றின் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பம் மும்பை மாநகராட்சி கழகத்திற்கு வந்துள்ளது. அதில் பெற்றோர்களின் பெயராக ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரிகானின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.



 



குழந்தை 34 வாரங்களில் பிறந்ததாகவும், 1.5 கிலோ எடையுடன் இருந்ததாகவும் மாநகராட்சிக் கழகத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் பாம்னே தெரிவித்துள்ளார். அந்தக் குழந்தை மஸ்ரானி மருத்துவமனையில் இருந்து ஜூஹுவில் உள்ள நானாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. வாடகைத் தாய் நமிதா சிப்பர் தற்போது அந்தக் குழந்தை ஷாருக்கான் தம்பதியரிடம் சேர்க்கப்பட்டு, அவர்களது இல்லத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் வாடகைத் தாய் குறித்த விபரமும் வெளியாகியுள்ளது. அவர் பெயர் நமிதா சிப்பர்.



ஷாருக்கான் மனைவியின் நெருங்கிய உறவினர் இவர். குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு அவர் லண்டனுக்குச் சென்றுவிட்டதாக ஷாருக்கானின் நண்பர்கள் கூறுகின்றனர். ஜூன் மாத இறுதியில் குழந்தைப் பிறப்பு பற்றிய அறிக்கை கிடைத்ததாக மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் மனிஷா மைஸ்கர் தெரிவித்துள்ளார். அப்போது குழந்தையின் பாலினம் குறித்து கருவிலேயே சோதனை செய்து தெரிந்துகொண்டதாக பரபரப்பான செய்தி வெளியானதால், இந்த அறிக்கையை உடனடியாகத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியதாக அவர்கள் தெரிவித்தனர். வாடகைத் தாய்களை அனுமதிக்கும் இந்திய சட்டவிதிமுறைகள், குழந்தையின் பாலினத்தைக் கருவிலேயே பரிசோதித்துத் தெரிந்து கொள்வதை அனுமதிப்பதில்லை.



 



இந்நிலையில் தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை நடிகர் ஷாருக்கான் மறுத்துள்ளார். விரைவில் இந்தக் குழந்தை குறித்து செய்தியாளர்களிடம் அவர் அறிவிப்பு வெளியிடப் போகிறாராம். ஷாரூக்கானுக்கு ஏற்கேனவே 15 வயதில் ஆர்யன் என்ற மகனும், 13 வயதில் சுஹானா என்ற மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.



 


வாடகைத் தாய் மூலம் ஷாரூக்கானுக்கு ஆண்குழந்தை - உறுதி செய்தார் கவுரி கான்